Home நாடு ஜோகூர் இளவரசரின் கோலாகலத் திருமண விருந்து

ஜோகூர் இளவரசரின் கோலாகலத் திருமண விருந்து

542
0
SHARE
Ad

Tunku-Ismail Johor Crown Princessஜோகூர் பாரு, நவம்பர் 10 – ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், செ புவான் கலீடா புஸ்தாமான் திருமணத்தை கொண்டாடும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இங்கு சிறப்பாக நடந்தேறியது.

இந்த பிரமாண்ட நிகழ்வில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். டத்தாரான் பண்டாராவில் திரளான மக்கள் கூட்டம் கூடியிருந்த வேளையில் திடீரென மழை பெய்தபோதும், யாரும் கலைந்து செல்லவில்லை.

அரச குடும்பத்து நிகழ்வை பொது மக்களும் காணும் விதமாக இரு பிரமாண்ட திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. எனினும் திடீர் மழை காரணமாக, திறந்திருந்த மெர்சிடீஸ் பென்ஸ் காரில் வலம் வரப்போகும் அரச தம்பதியரை காண ஆவலுடன் காத்திருந்த பொதுமக்களில் பலர் ஏமாற்றமடைந்தனர்.

#TamilSchoolmychoice

ராணுவ உடையில் மிடுக்காக காட்சியளித்த துங்கு இஸ்மாயிலும், வெள்ளை நிற கவுன் உடையில் காட்சியளித்த சீ புவான் கலீடாவும் இரவு 8.50 மணிக்கு அரண்மனைத் திடலுக்கு வந்தனர்.

ஆனால் மழை காரணமாக அரச நிகழ்வு உள்ளரங்குக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர், அவரது துணைவியார் ராஜா சரித் சோபியா சுல்தான் இட்ரிஸ் ஷா ஆகியோர் தங்களது புதல்வர், புதல்வியர் மற்றும் ஜோகூர் அரச குடும்பத்தின் இதர உறுப்பினர்களுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் பகாங் சுல்தான் அகமட் ஷா மற்றும் சுல்தானா கல்சோம், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தம்பதியர், மத்திய அமைச்சர்கள் மற்றும் ஜோகூர் மாநில நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுங்கும், புருணை சுல்தான் ஹசானால் போல்கியா ஆகியோரும் இந்த சிறப்பு விருந்தில் கலந்து கொண்டனர்.