Home இந்தியா மோடி அமைச்சரவை முதல் முறையாக விரிவாக்கம்: 21 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

மோடி அமைச்சரவை முதல் முறையாக விரிவாக்கம்: 21 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

659
0
SHARE
Ad

manohar-parrikarடெல்லி, நவம்பர் 10 – நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 5 மாதங்கள் கழித்து இன்று முதன்முறையாக தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். அவரது அமைச்சரவையில் தற்போது 45 அமைச்சர்கள் உள்ளனர்.

அதில் பிரதமர் உள்பட 23 பேர் அமைச்சரவை உறுப்பினர்கள், மற்றவர்கள் இணை அமைச்சர்கள். இந்நிலையில் தான் அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் 21 பேருக்கு பதவி தரப்பட்டுள்ளது. புதியவர்களை சேர்த்து மோடி அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 66 ஆகியுள்ளது.

#TamilSchoolmychoice

புதிய அமைச்சர்கள் அதிபர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நேற்று பிற்பகலில் நடந்த பதவியேற்பு விழாவில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

புதிய அமைச்சரவை உறுப்பினர்கள்:

1.மனோகர் பாரிகர்

2.சுரேஷ் பிரபாகர் பிரபு

3.ஜெகத்பிரகாஷ் நட்டா

4.சவுத்ரி பீரேந்திர சிங்

rajiv-pratap-rudyஇணை அமைச்சர்கள்:

5.முக்தார் அப்பாஸ் நக்வி

6.பண்டாரு தத்தாத்ரேயா

7.ராஜீவ் பிரதாப் ரூடி

8.ஒய்.எஸ். சவுத்ரி

9.கிரிராஜ் சிங்

10.பாபுல் சுப்ரியோ

11.ஹன்ஸ்ராஜ் அஹிர்

12.சாத்வி நிரஞ்சன் ஜோதி

13.விஜய் சாம்ப்லா

14.டாக்டர் மகேஷ் சர்மா

15.ராம் க்ரிபால் யாதவ்

16.ஹரிபாய் சவுத்ரி

17.பேராசிரியர் சான்வார் லால் ஜாட்

18.மோகன்பாய் கல்யாண்ஜிபாய் குந்தரியா

19.ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர்

20.பேராசிரியர் டாக்டர் ராம்சங்கர் கட்டேரியா

21.கர்னல் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

சிவசேனா பரிந்துரைத்த அனில் தேசாய்க்கு பதில்  மோடி சுரேஷ் பிரபுவுக்கு அமைச்சர் பதவி வழங்கினார்.  இதைனால் சிவசேனா பதவியேற்பு விழாவை புறக்கணித்தது. அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.