Home தொழில் நுட்பம் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் மைக்ரோசாப்ட் வேர்ட்!

ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் மைக்ரோசாப்ட் வேர்ட்!

535
0
SHARE
Ad

Apple_App_Storeகோலாலம்பூர், நவம்பர் 10 – மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் ஐஒஎஸ் கருவிகளுக்காக இலவசமாக வெளியிட்ட ‘மைக்ரோசாப்ட் வேர்ட்’ (Microsoft Word) செயலி, ஐஒஎஸ் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை பெரும்பாலான பயனர்கள் பதிவிறக்கம் செய்து வருவதால், ஆப்பிளின் ‘ஆப் ஸ்டோர்’ (App Store)-ல் பேஸ்புக் செயலிக்கு அடுத்த இடத்தை இது பிடித்துள்ளது.

திறன்பேசிகளின் புரட்சி காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் முக்கிய மென்பொருளான மைக்ரோசாப்ட் ஆபிஸ்-ஐ, ஐஒஎஸ் மற்றும் அண்டிரொய்டு தளங்களுக்கு தகுந்தாற் போல் மாற்றங்கள் செய்து வெளியிடத் திட்டமிட்டது.

#TamilSchoolmychoice

அதன்படி வெளியான ஆபீஸ் 365 இலவசமாக பதிவிறக்கம் செய்யப்பட்டாலும், பயனர்கள் அதனை முழுமையாகப்  பயன்படுத்திக் கொள்ள ஆண்டிற்கு 99 அமெரிக்க டாலர்கள் வரை பணம் செலுத்த வேண்டி இருந்தது.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் ஆபீஸ் 365-ஐ, அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்  வகையில் இலவசமாகவே  வெளியிட்டது.

appsபயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த செயலி, அனைவராலும் அதிவேகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது. ஐபோன், ஐபேட் என அனைத்து ஐஒஎஸ் கருவிகளிலும், இந்த செயலி பொதுவான செயல்பாடுகளைக் கொண்டுள்ளதால், இது பயனர்களுக்கு புதிய அனுபவமாக உள்ளது.

சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி ஏற்றது முதல், மைக்ரோசாப்ட் ஆபீஸ்-ஐ கணினி மட்டும் இல்லாமல் திறன்பேசிகளின் தளங்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அந்த முயற்சிகள் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பலன் தரத் துவங்கி உள்ளன