Home இந்தியா கருப்பு பண விவகாரம்: ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்படும் பிரதமர் மோடி உறுதி!

கருப்பு பண விவகாரம்: ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்படும் பிரதமர் மோடி உறுதி!

391
0
SHARE
Ad

modi13புதுடெல்லி, நவம்பர் 11 –  மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி ஆகிய  நாடுகளுக்கு 10 நாட்கள் அரசு முறை பயணத்தை பிரதமர் மோடி இன்று  மேற்கொள்ள உள்ளார்.

மியான்மரில் நடைபெறும் ஏசியன் உச்சிமாநாடு,  ஆஸ்திரேலியாவில் நவம்பர் 15-ல் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு  உள்ளிட்டவற்றில் பங்கேற்கவுள்ள மோடி, சுமார் 40-க்கும் அதிகமான  அனைத்துலக தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.

இந்த சந்திப்பின்போது,  கருப்பு பண விவாகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என  மோடி கூறியுள்ளார். இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், “கருப்பு பணத்தை மீட்பதில் அனைத்துலக நாடுகளின்  ஒத்துழைப்பை பெறுவதுதான், எனது இந்தப் பயணத்தின் முக்கிய  நோக்கமாக இருக்கும்.“ என்று கூறியுள்ளார் மோடி.

#TamilSchoolmychoice

மியான்மர் மாநாட்டின் இடைப்பட்ட நேரத்தில் சீன பிரதமர் லீ  கெச்சியாங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இந்த இரண்டு தலைவர்களும் முதல் முறையாக சந்திக்கின்றனர்.

கடந்த  மே மாதம் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக மோடி  பதவியேற்றபோது சீனப் பிரதமர் லீயும் வாழ்த்தினார். வாழ்த்துச்  செய்தியில்  இரு நாடுகளுக்கும் இடையே உறவு மேம்பட வேண்டும்  என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

மியான்மரில் சீன பிரதமருடன்  அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதிகாரிகள்  அளவிலான பேச்சுவார்த்தையும் நடைபெறும் என்றும் வெளியுறவுத்  துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பரூதீன் தெரிவித்தார்.