Home அவசியம் படிக்க வேண்டியவை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வருக்கு சாமிவேலு அழைப்பு!

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வருக்கு சாமிவேலு அழைப்பு!

953
0
SHARE
Ad

samyvelluசென்னை, நவம்பர் 12 – கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் 9-வது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, நேற்று டத்தோஸ்ரீ உத்தாமா டாக்டர் ச.சாமிவேலு அழைப்பிதழ் வழங்கினார்.

இந்தியா மற்றும் தெற்காசிய கட்டமைப்புக்கான சிறப்புத் தூதரும் ஒன்பதாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான சாமிவேலு நேற்று சென்னையிலுள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் பன்னீர்செல்வத்தை சந்தித்தார்.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் புத்ராஜெயா – புதுடில்லிக்கு இடையில் குறிப்பாக தமிழக உறவு தொடர்பாகவும் விவாதித்தனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

இந்த சந்திப்பில் மலேசிய தூதரக அதிகாரி சித்ராதேவி இராமையாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.