Home நாடு முன்னாள் தேசிய காற்பந்து கோல்கீப்பர் பீட்டர் ராஜா காலமானார்!

முன்னாள் தேசிய காற்பந்து கோல்கீப்பர் பீட்டர் ராஜா காலமானார்!

538
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.pngகோத்தா கினபாலு, நவம்பர் 14 – தேசிய காற்பந்து விளையாட்டு அணியின் முன்னாள் கோல்கீப்பர் பீட்டர் ராஜா (வயது 63) இன்று காலை 6.16 மணியளவில் காலமானார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு டச்சஸ் ஆஃப் கெண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கடந்த 1972 மற்றும் 1995-ம் ஆண்டுகளில் சபா அணியில் ராஜா விளையாடினார். கடந்த 1981 -ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைட்டைட் அணிக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் தனது சக விளையாட்டாளர்களான ஹாசன் சனி மற்றும் ஜேம்ஸ் வோங் ஆகியோருடன் இணைந்து விளையாடினார்.

#TamilSchoolmychoice

கடந்த 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் விளையாட்டில் மலேசிய அணி இடம்பெறுவதற்கு பீட்டர் ராஜாவின் பங்களிப்பும் பேருதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.