Home நாடு எம்எச்370, எம்எச்17: தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 33 மில்லியன் ரிங்கிட் செலவு

எம்எச்370, எம்எச்17: தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 33 மில்லியன் ரிங்கிட் செலவு

562
0
SHARE
Ad

Liow-Tiong-Lai-2கோலாலம்பூர், நவம்பர் 14 – எம்எச்370 மற்றும் எம்எச்17 ஆகிய இரு விமானங்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக இதுவரை 33 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் 3732 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ  லியோவ் தியோங் லாய் (படம்) தெரிவித்தார்.

இரு விமானங்கள் தொடர்பாக ஐசெக தஞ்சோங் தொகுதி உறுப்பினர் வெய் அய்க் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, எழுத்து மூலம் தியோங் லாய் பதிலளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இரு விமானங்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான செலவுகளை இப்பேரிடர் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன,” என்று தனது பதிலில் தியோங் லாய் குறிப்பிட்டுள்ளார்.

எம்எச் 370 விமானம் கடந்த மார்ச் 8ஆம் தேதி மாயமான நிலையில் எம்எச் 17 விமானம் கடந்த ஜூலை 17ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது.