பிரிஸ்பேன், நவம்பர் 17 – பிரிஸ்பேனில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் உலகத் தலைவர்களால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெரிதும் விரும்பப்பட்டார் என வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் புகழாரம் சூட்டியுள்ளன.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரை வந்தடைந்த நரேந்திர மோடி, தனது வருகைக்காக காத்திருந்தவர்களுக்கு வணக்கம் கூறுகின்றார்…
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில், உலகின் முன்னணி நாடுகளின் தலைவர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். விழாவில், ‘ஜொலிக்கும் நட்சத்திரமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திகழ்ந்தார்’ என்று ‘தி கார்டியன்’ எனும் பிரிட்டனிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிக்கை தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஜெர்மன் அதிபர் அஞ்சலா மெர்கலுடன் மோடி…
இது தொடர்பாக வெளியாகி உள்ள கட்டுரையில், “அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட அனைத்து நாட்டுத் தலைவர்களும் மோடியைச் சுற்றிச் சுற்றி வந்தனர். மோடியும், ஒபாமாவும் பேசி சிரித்து வந்த காட்சியை தொடர்ச்சியாகக் காண முடிந்தது. ஒபாமா, விளாடிமிர் புடின், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் போன்ற முக்கியத் தலைவர்கள், மோடியின் கவனத்தைப் பெறுவதில் ஆர்வம் காட்டினர். மோடியை ஆஸ்திரேலியப் பிரதமர் அப்பாட் கட்டி அணைத்து வரவேற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.”
“இந்தியப் பிரதமர் மோடியை பார்க்கவும், இவரால் பார்க்கப்படவும் உலகத் தலைவர்கள் விரும்பினர்” என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிஸ்பேனிலுள்ள மரபணு மேம்படுத்தப்பட்ட தாவரங்களுக்கான (genetically modified) விஞ்ஞானக் கூடத்திற்கு வருகை தந்த மோடி அங்கு தனக்கு தரப்பட்ட விளக்கத்தை உன்னிப்பாக கேட்டறிகின்றார்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுடன் நரேந்திர மோடி
ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட்டுடன், கோலா கரடிக் குட்டி பற்றி ஏதோ பேசி மகிழும் மோடி…..
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுடன் நரேந்திர மோடி….
படங்கள் : EPA