Home நாடு எம்எச்17 பற்றிய துணைக்கோளப் படங்களை நம்ப வேண்டாம் – ஹிஷாமுடின்

எம்எச்17 பற்றிய துணைக்கோளப் படங்களை நம்ப வேண்டாம் – ஹிஷாமுடின்

532
0
SHARE
Ad

20140213_Hishammuddin_stகோலாலம்பூர், நவம்பர் 18 – எம்எச்17 விமானத்தை கிழக்கு உக்ரைன் அருகே போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாக அண்மையில் இணையத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ள பல புகைப்படங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தற்காப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹிஷாமுடின் நேற்று வெளியுட்டுள்ள அறிக்கையில், “அது போன்ற வதந்திகளை கண்ணை மூடிக்கொண்டு உடனே நம்பி விடாதீர்கள். ரஷ்யத் தொலைக்காட்சி ஒன்றில் அந்த புகைப்படங்களை அனைத்துலக விசாரணைக் குழுவிடம் கலந்தாலோசிக்காமலேயே வெளியிட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்துலக விசாரணைக்குழு அந்த புகைப்படங்கள் உண்மையானவை தானா என்பதை விசாரணை நடத்தும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் ஹிஷாமுடின் கேட்டுக்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice