Home கலை உலகம் நடிகை திரிஷா திடீர் திருமணம் : சினிமா தயாரிப்பாளரை மணக்கிறார்!

நடிகை திரிஷா திடீர் திருமணம் : சினிமா தயாரிப்பாளரை மணக்கிறார்!

554
0
SHARE
Ad

trishaசென்னை,  நவம்பர் 18 – நடிகை திரிஷா, சினிமா தயாரிப்பாளரை திருமணம் செய்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் திருமணம் நடக்கிறது என செய்தி வெளியாகியுள்ளது.

தமிழில், ‘லேசா லேசா’ என்ற படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் திரிஷா. தொடர்ந்து, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம், பீமா, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’, ‘அப்பா டக்கர்’, ‘பூலோகம்‘, மற்றும் தனுஷ் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம் என நடித்துவருகிறார்.

#TamilSchoolmychoice

இவரும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. இருவரும் சினிமா விழாக்களுக்கு ஒன்றாக ஜோடி சேர்ந்து வந்துகொண்டிருந்தனர். திடீரென்று கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதை அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சென்னையில் ரகசிய நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் நடந்துள்ளதாம். சென்னை செனடாப் சாலையில் உள்ள திரிஷாவின் வீட்டில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனராம்.

இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு மார்ச் முதல் வாரம் அல்லது 15-ஆம் தேதி நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. வருண் மணியன், பாலாஜி மோகன் இயக்கிய ‘வாயை மூடிப் பேசவும்‘ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.

மேலும் ‘ஒய் நாட் ஸ்டூடியோஸ்’ சசிகாந்துடன் இணைந்து ‘காவியத் தலைவன்’ படத்தை தயாரித்துள்ளார். சிம்பு நடிக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளார். மேலும் கட்டுமான நிறுவனமும் நடத்தி வருகிறார்.