தெமர்லோ, பிப்.26- தேசிய உயர்கல்வி கடன் வாரியத்திடமிருந்து (பி.டி.பி.டி.என்) கடன் பெற்ற மாணவர்களுள் 16, 051 பேர் இளங்கலை பட்டப் படிப்பில் முதல் நிலை தேர்ச்சி பெற்றதால் அவர்கள் கடனுதவியை திருப்பச் செலுத்துவதினின்று விலக்களிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரையிலுமான காலக்கட்டத்தில் இந்த கல்வி தேர்ச்சி பெறுவோருக்கு இந்த விலக்களிக்கப்படும் என்று பி.டி.பி.டி.என் தலைவர் டத்தோ இஸ்மாயில் முகமட் சைட் அறிவித்தார்.
அம்மாணவர்களுக்கான கடனுதவி உபகாரச் சம்பளமாக மாற்றப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
தெமர்லோவில் நேற்று 1,066 பேருக்கு 1 மலேசியா உதவி நிதியை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.