Home 13வது பொதுத் தேர்தல் கோபாலகிருஷ்ணன் சுயேட்சையாக போட்டியிடுவதால், பாடாங் செராயில் பிகேஆர் மீண்டும் வெற்றி பெறுமா?

கோபாலகிருஷ்ணன் சுயேட்சையாக போட்டியிடுவதால், பாடாங் செராயில் பிகேஆர் மீண்டும் வெற்றி பெறுமா?

788
0
SHARE
Ad

Gopalakrishnan-Feature

 

 

#TamilSchoolmychoice

 

 

 

 

 

பிப்ரவரி 26 –  பாடாங் செராய் தொகுதியின் தற்போதைய நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான என்.கோபாலகிருஷ்ணன் அந்த தொகுதியில் மீண்டும் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றார்.

கோபாலகிருஷ்ணன்  ஆரம்ப காலத்தில் மஇகாவில் இருந்தவராவார். அதிலிருந்து பின்னர் விலகி அவர் பிகேஆர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அன்வாரின் தீவிர ஆதரவாளராகி, பிகேஆர் சார்பில் பாடாங் செராய் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் ஒரு வருடத்திற்கு முன் அன்வாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயேட்சை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில்  அத்தொகுதியில் வழக்கறிஞரும், பிகேஆர் கட்சியின் உதவித்தலைவருமான சுரேந்திரனை வேட்பாளராக பிகேஆர் கட்சி அறிவித்திருக்கிறது.

பிகேஆர்  பாடாங் செராய் தொகுதியை தற்காத்துக்கொள்ளுமா?

கோபாலகிருஸ்ணன், பாடாங் செராய் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், பிகேஆர் கட்சியால் அத்தொகுதியை தற்காத்துக்கொள்ள முடியுமா  என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கோபாலகிருஷ்ணன்  இந்த தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, தொகுதி மக்களுக்கு சேவையாற்றி, பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் சுயேட்சையாக போட்டியிட்டால், அவரது ஆதரவு வாக்குகள் எதிர்க்கட்சி வாக்குகளை கணிசமான அளவு குறைக்க வாய்ப்புள்ளது.

இதனால் இத்தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

பாடாங் செராயில் ம.இ.கா போட்டியா?

இதற்கிடையில் ம இ கா பாடாங் செராயில் போட்டியிட பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக ம.இ.கா தேசியத் தலைவர் ஜி.பழனிவேல் அறிவித்துள்ளார்.

ம.இ.காவின் தற்போதைய தொகுதிகளான காப்பார் அல்லது சுபாங்ஜெயா தொகுதிக்கு மாற்றாக பாடாங் செராய் தொகுதியை கேட்டு தேசிய முன்னணியிடன் ம.இ.கா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக அறியப்படுகின்றது.