Home கலை உலகம் இசையமைப்பாளர் தமன் பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த கார் பரிசளித்த தியாகராஜன்!

இசையமைப்பாளர் தமன் பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த கார் பரிசளித்த தியாகராஜன்!

776
0
SHARE
Ad

Saahasam

சென்னை, நவம்பர் 18 – தியாகராஜன் தயாரிப்பில் அவரது மகன் பிரஷாந்த் நடித்து வரும் புதிய படம் சாஹசம். இந்த படத்தின் இசையமைப்பாளர் தமனின் பிறந்தநாள் விழா, அண்மையில் சென்னை டி.நகரில் அமைந்துள்ள பிரஷாந்த் கோல்டன் டவர் கட்டிடத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாள் விழாவில் ‘சாஹசம்’ படக்குழுவினரோடு, விஜய் டிவி புகழ் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி தனது கணவருடன் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

Saahasam 1

‘சாஹசம்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக வந்துள்ளதால், தமனின் திறமையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த தியாகராஜன், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ‘டொயட்டா பார்டியூனர்’ கார் ஒன்றை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார்.