புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி பொறுப்பேற்றார். இவர், முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், சட்டசபை இணையதளத்தில் ‘முதல்வர் ஜெயலலிதா‘ என்ற பெயர் நீக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று சட்டசபை செயலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அனைத்து இடங்களிலும் ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டிருந்தது.
முதல்வர் என்ற இடத்தில் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளது. இதேபோல் ஒவ்வொரு துறை இணைய தளத்திலும் ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டுள்ளது.
Comments