Home கலை உலகம் விஷாலை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவோம் – சரத்குமார்

விஷாலை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவோம் – சரத்குமார்

629
0
SHARE
Ad

vishal vs sarathkumarசென்னை, நவம்பர் 19 – திருச்சியில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

“நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் ஒரு பிடி மண்ணை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் விஷால் எனக்கு நோட்டீஸ் அனுப்புவதாக கூறுவது சரியல்ல. விஷாலுக்கு தான் நாங்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும்”.

“பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் இதைப்பற்றி கேள்வி கேட்கக்கூடாது. விஸ்வரூபம் படப்பிரச்சனையில் ஒரு நாள் இரவு முழுவதும் கமலுடன் அமர்ந்து நானும் ராதாரவியும் பேசினோம் என்பது விஷாலுக்கு தெரியவில்லையா?”

#TamilSchoolmychoice

‘பூச்சி முருகன் என்பவர் அவருக்கு பதவி வழங்கவில்லை என்பதற்காக வழக்கு போட்டுள்ளார். நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குறை கூறும் அவரை கண்டிக்காமல் விஷால் தவறான தகவலை கூறினால் அவர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

“நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். இனியும் இது போன்று செயல்பட்டால் விஷாலை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவோம் என்று எச்சரிக்கிறேன். விஷால் இவ்வாறு செயல்படுவதற்கு பின்னணி உள்ளதா என்பது எனக்கு தெரியாது” என சரத்குமார் கூறினார்.