ஹிசார், நவம்பர் 19 – இந்தியாவின் அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலின் ஆசிரமத்தின் முன் காவல்துறையினருக்கும், சாமியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 மாத குழந்தை உட்பட 6 பேர் பலியாகிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
கொலை வழக்கில் சிக்கிய சாமியார் ராம்பால் (படம்) நேரில் ஆஜராக அரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக தன்னால் ஆஜராக முடியாது என மறுத்த சாமியார் ராம்பால் தலைமறைவானார்.
அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்திருத்தனர். அதற்கும் ராம்பால் மறுத்து வந்தார். இந்நிலையில், ஹிசாரில் உள்ள ஆஸ்ரமத்தில் அவர் பதுங்கி உள்ளதாக தகவல்கள் வௌியாகின.
இதையடுத்து, தலைமறைவாக உள்ள சாமி்யாரை கைது செய்வதற்காக ஹிசாரில் அமைந்துள்ள அவரது ஆசிரமத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.
ஆனால் அவர்களை ஆசிரமத்திற்குள் நுழைய விடாமல் சாமியாரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர் . இதனால் போராட்டம் கலவரமாக மாறியதுயதை தொடர்ந்து காவல்துறை கலவரத்தை அடக்க போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினர் .
இந்த தாக்குதலில் 4 பெண்கள் மற்றும் 18 மாத குழந்தை உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.பலியான 4 பெண்களின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் காவல்துறை தாக்குதலில் உயிரிழக்கவில்லை என்றும் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததே இவரது உயிரிழப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுள்ளது .