Home கலை உலகம் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ருத்ரையா மரணம்!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ருத்ரையா மரணம்!

573
0
SHARE
Ad

rutraiyaசென்னை, நவம்பர் 19 – திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.

1978-ஆம் ஆண்டு வெளிவந்த “அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தார் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கென முதன்முதலாக தனித்துவத்தை ஏற்படுத்தித் தந்த ருத்ரையா 1980-ஆம் ஆண்டு சந்திரஹாசன் நடிப்பில் வெளிவந்த “கிராமத்து அத்தியாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

#TamilSchoolmychoice

ருத்ரையாவுக்கு ஒரு மகள் உள்ளார். ருத்ரையாவின் இறுதிச்சடங்குகள் இன்று (நவம்பர் 19) சென்னையில் நடைபெறுகிறது.