Home உலகம் ஜெருசலேத்தில் தாக்குதல் – இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் பதற்றம்!

ஜெருசலேத்தில் தாக்குதல் – இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் பதற்றம்!

672
0
SHARE
Ad

shoot1ஜெருசலேம், நவம்பர் 20 – இஸ்ரேலின் ஜெருசலேம் வழிபாட்டுத் தலத்தில் 2 பாலஸ்தீன இளைஞர்கள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் பதற்றம் வெடித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 இஸ்ரேல் படை வீரர்களை, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்தனர்.

இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே காசா பகுதியில் போர் வெடித்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் பலியாகினர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்திற்குள் நேற்று முன்தினம் 2 பாலஸ்தீனர்கள் நுழைந்து, அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலியர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.

shoot7இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை ஹமாஸ் இயக்கமே நடத்தியதாகக் கூறப்படுகின்றது. இதனால் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:- “படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

ஜெருசலேமில் பாலஸ்தீனர்கள் மட்டுமே பிரார்த்தனை நடத்த வேண்டும், மற்ற வழிபாட்டுத் தலங்கள் இருக்கக்கூடாது என்று ஹமாஸ் இயக்கம் வலியுறுத்தி வருகின்றது. அதன் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.