கேடி பெரந்தாவ் என்ற அக்கப்பலில் பராமரிப்புப்பணி நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 11.15 மணி அளவில் அதற்குள் தண்ணீர் புகுந்தது என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
“கப்பல் மூழ்காமல் தடுக்கும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் நிகழ்ந்தபோது உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை,” என்றார் அவர்.
கேடி பெரந்தாவ் கப்பலின் கட்டுமானம், பினாங்கில் உள்ள லிம்புங்கான் ஹோங் லியோங் லெர்சனில் நடைபெற்றது. பின்னர் கடந்த அக்டோபர் 12, 1998ல் அது கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இச்சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிவது தொடர்பில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றார் அவர். இதற்கிடையே பவுஸ்டீட் கடற்படைத் தளத்தை நிர்வகிக்கும் பவுஸ்டீட் கனரக தொழிற்சாலை கார்ப்பரேஷன் பெர்காட் நிறுவனம்,
கப்பலுக்கு இவ்வாறு நேர்ந்ததற்கான காரணங்கள் குறித்து ஆருடங்களை வெளியிட விரும்பவில்லை என்றும் சரியான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.