Home அவசியம் படிக்க வேண்டியவை 2016-ல் இந்திய இணைய வர்த்தகத்தின் வருவாய் 15 பில்லியனைத் தாண்டும்: கூகுள்!

2016-ல் இந்திய இணைய வர்த்தகத்தின் வருவாய் 15 பில்லியனைத் தாண்டும்: கூகுள்!

471
0
SHARE
Ad

google indiaபுதுடெல்லி, நவம்பர் 22 – இந்தியாவில் இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இணைய வர்த்தகத்தின் வருவாயும் கடந்த வருடங்களைக் காட்டிலும் புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருகின்றது. 2016-ல் இந்தியாவில் இணைய வர்த்தகத்தின் வருவாய் 15 பில்லியனைத் தாண்டும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் இணைய வர்த்தகத்தின் வளர்ச்சி பற்றி சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் முடிவில் இந்திய இணைய வர்த்தகத்தின் வளர்ச்சியைப் பற்றி அறிக்கை ஒன்றை சமர்பித்தது.

அந்த அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“கடந்த 21012-ல் இணைய வர்த்தகத்தை மேற்கொள்ளும் பயனர்களின் எண்ணிக்கை 8 மில்லியனாக இருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் சுமார் 35 மில்லியன் மக்கள் இணைய வர்த்தகம் மூலமாக தங்களின் வர்த்தகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். அடுத்த இரு வருடங்ளுக்குள் இந்த எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டலாம்.”

“இந்தியாவில் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள், சுமார்  302 மில்லியன் பயனர்கள் இணையத்தை பயன்படுத்துவர் அதனால் 2016-ல் சுமார் 50 மில்லியன் புதிய பயனர்கள் இணைய வர்த்தகத்திற்கு அறிமுகமாவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூகுள் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ராஜன் ஆனந்தன் கூறுகையில், “அடுத்த 12 மாதங்களில் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக  71 சதவீத பயனர்கள், இணைய வர்த்தகத்தில் இணைவர் என்ற நம்பிக்கை வர்த்தக நிறுவனங்களிடம் உள்ளது. இதன் மூலம் இணைய வர்த்தக வருவாய் பல மடங்கு வளர்ச்சியை சந்திக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

இணைய வர்த்தகம் தொடர்பாக சுமார் 6,859 பயனர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், இணைய வர்த்தகத்தை அந்தஸ்தின் அடையாளமாகவே கருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.