Home கலை உலகம் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிப்பது உண்மைதான் – கிரிக்கெட் வீரர் விராட்கோலி ஒப்புதல்!

நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிப்பது உண்மைதான் – கிரிக்கெட் வீரர் விராட்கோலி ஒப்புதல்!

741
0
SHARE
Ad

 Indian vice captain Virat Kohli மும்பை, நவம்பர் 23 – இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் வீராட் கோலி. இவரும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன.

நியூசிலாந்து பயணம், இங்கிலாந்து பயணம், இலங்கையில் நடந்த படப்பிடிப்பு போன்றவற்றில் இருவரும் இணைந்த, பொது இடங்களுக்கு சென்ற படங்களும் வெளியாகி இருந்தன.

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான 3–வது ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்தபோது அனுஷ்கா சர்மா இருந்த திசையை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தார் கோலி. அவர்களது காதலை இது மேலும் உறுதிப்படுத்தியது.

#TamilSchoolmychoice

anushka-sharma-

ஆனால் இதுவரை இதுபற்றி தெரிவிக்காத வீராட் கோலி முதல் முறையாக அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் காதலை ஒப்புக் கொண்டுள்ளார். மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து அவர் கூறியதாவது:–

“நாங்கள் எதையும் மறைக்க முயற்சிக்கவும் இல்லை. அப்படி இருக்கும் போது அதற்காக ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு அதுபற்றி விவாதம் நடத்துவது சரியென்று நாங்கள் கருதவில்லை.  இருவரும் இணைந்து செல்வதை பார்த்துவிட்ட பிறகும் இது உண்மைதானா? என்று கேட்கின்றனர். இந்த இடத்தில் மக்கள் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்”.

“எனக்கும் அனுஷ்காவுக்கும் இடையே நட்பு இருக்கிறது. இதுபற்றி யாரும் அதிகம் தெரிந்து கொள்ள விரும்பக்கூடாது. இது எங்களது தனிப்பட்ட உரிமை இதை நாங்கள் வெளிப்படையாக பேச விரும்பவில்லை என்பதை இதை ஊடகங்களுக்கும், மற்றவர்களுக்கும் புரிந்து கொள்ள வேண்டும்” என வீராட் கோலி கூறியுள்ளார்.

வீராட்கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சரியாக ஆடாததற்கு அனுஷ்கா சர்மா உடன் சென்றது தான் காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.

அப்போது கிரிக்கெட் வாரியம் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தது. இதுபற்றி எதுவும் தெரிவிக்காமல் இருந்த கோலி தற்போது மவுனத்தை கலைத்துள்ளார்.