Home உலகம் பொருளாதாரத் தடைகளால், ஆண்டுக்கு 40 பில்லியன் டாலரை இழக்கும் ரஷ்யா!  

பொருளாதாரத் தடைகளால், ஆண்டுக்கு 40 பில்லியன் டாலரை இழக்கும் ரஷ்யா!  

630
0
SHARE
Ad

மாஸ்கோ, நவம்பர் 28 – ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுவதாக அந்நாட்டு நிதி அமைச்சர் ஆன்டன் சிலுவனோவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற பொருளாதாரக் கருத்தரங்கில் அவர் கூறியதாவது:-

“ரஷ்ய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. இது 30 சதவீதம் வீழ்ச்சியடைந்தால், ஆண்டுக்கு 90 பில்லியன் டாலர் முதல் 100 பில்லியன் டாலர் வரை இழப்பை நாம் சந்திக்க நேரிடும். மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவுக்கு ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

putin

ரஷ்ய பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக அதிபர் புதின் (படம்) செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “தற்போதைய சூழலில், உலக நாடுகள் ஒன்றையொன்று பெரிதும் சார்ந்துள்ளன. பொருளாதாரத் தடை, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, ரூபிளின் மதிப்பு சரிவு இவையெல்லாம் ரஷ்யாவிற்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதன் மூலமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. அங்கு அதிகப்படியான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் புதினின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நோக்கம் என ரஷ்ய அரசு வட்டாரங்கள் குற்றம் சாட்டி உள்ளன.