Home நாடு கோலாலம்பூர்: 8 முக்கிய சாலைகளுக்கு புதுப்பெயர்கள்

கோலாலம்பூர்: 8 முக்கிய சாலைகளுக்கு புதுப்பெயர்கள்

586
0
SHARE
Ad

DBKL Imageகோலாலம்பூர், நவம்பர் 26 – கோலாலம்பூரில் உள்ள எட்டு முக்கிய சாலைகளுக்கு புதுப்பெயர்கள் சூட்டப்பட உள்ளன. வரும் புதன்கிழமை முதல் இச்சாலைகள் புதிய பெயர்களில் அழைக்கப்படும் எனத் தெரிகிறது.

ஜாலான் ஈப்போ, ஜாலான் கிட்மாட் உசாகா, ஜாலான் டூத்தா ஆகிய சாலைகளுக்கு காலஞ் சென்ற மாமன்னர்களின் பெயர்கள்  சூட்டப்பட உள்ளன.

ஜாலான் டூத்தா சாலை ஜாலான் துங்கு அப்துல் ஹாலிம் என்றும், ஜாலான் கிட்மாட்
உசாஹா சாலை ஜாலான் சுல்தான் ஹாஜி அஹமட் ஷா என்றும் பெயர் மாற்றம்
செய்யப்படும் என கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஜாலான் சிகாம்புட்டில் இருந்து ஜாலான் பகாங் வரை நீளும் ஜாலான் ஈப்போ
சாலைக்கு ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா என்று பெயர் சூட்டப்பட உள்ளது.
பெர்சியாரான் டூத்தா சாலை இனி பெர்சியாரான் துங்கு சைட் சிராஜுடின்
என்றும், ஜாலான் கிட்மாட் செதியா மற்றும் ஜாலான் இபாடா ஆகிய சாலைகள் இனி
ஜாலான் சுல்தான் மிர்சான் சைனால் அபிடின் என்றும் குறிப்பிடப்படும்.

லெபோராயா மகாமேரு என்ற பெயர் லெபோராயா சுல்தான் இஸ்கந்தர் என்றும்
பெர்சியாரான் மகாமேரு என்பது பெர்சியாரான்  துங்கு ஜாஃபார் என்றும் பெயர்
மாற்றம் செய்யப்பட உள்ளது.

ஜாலான் செமாராக் சாலைக்கு ஜாலான் சுல்தான் யாஹ்யா பெத்ரா என்ற புதுப்பெயர்
சூட்டப்படும்.

இச்சாலைகளுக்கான புதிய பெயர்ப் பலகைகள் இன்று புதன்கிழமை (நவம்பர் 26)
முதல் நிறுவப்படும் என கோலாலம்பூர் மாநகர் மன்றம் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில்
தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இந்த பெயர் மாற்றங்கள் மலேசிய சுல்தான்கள் மாநாட்டின் வேண்டுகோளாக கோலாலம்பூர் மாநகரசபையிடம் முன்வைக்கப்பட்டது என்றும் அதற்கேற்பவே இந்த பெயர் மாற்றங்கள் அமுல்படுத்தப்படுகின்றன என்றும் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பால மோகன் தெரிவித்துள்ளார்.