Home உலகம் சார்க் மாநாட்டில் மோடி-ஷெரீப் இடையே சந்திப்பு நிகழவில்லை!

சார்க் மாநாட்டில் மோடி-ஷெரீப் இடையே சந்திப்பு நிகழவில்லை!

792
0
SHARE
Ad

sarc-600காத்மாண்டு, நவம்பர் 27 – நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்று வரும் 18-வது சார்க் உச்சி மாநாட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் பரஸ்பர சந்திப்பு நடைபெறவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் காத்மாண்டு புறப்படுவதற்கு முன், “அண்டை நாடுகளுடன் பரஸ்பர அமைதி மற்றும் நல்லுறவையே இந்தியா விரும்புகின்றது. அதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா எப்பொழுதும் தயாராகவே இருக்கும்” என்று கூறியிருந்தார்.

அதன் காரணமாக மோடி மற்றும் ஷெரீப் இடையே பரஸ்பர சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தொடங்கிய மாநாட்டில் மோடி, ஷெரீப்பை  சந்திக்க வில்லை என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

8 தெற்கு ஆசிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் நரேந்திர மோடியின்  இருக்கைகளிலிருந்து இரண்டு இருக்கைகள் தள்ளி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமர்திருந்தார் என்று அவர்களுக்கு நடுவே மாலத்தீவு மற்றும் நேபாள நாட்டுத் தலைவர்கள் இருந்ததால் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே கைக்குலுக்கள் போன்ற பரஸ்பர விசாரிப்புகள் கூட நடைபெற வில்லை என இந்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

மோடி மற்றும் ஷெரீப் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாதது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறுகையில், “இந்தியா – பாகிஸ்தான் பிரதமர்கள் இடையே  எந்தவித சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

பாகிஸ்தான் அரசிடம் இருந்தும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு எவ்வித கோரிக்கையும் வரவில்லை. அதன் காரணமாக இந்த சந்திப்பு நிகழவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.