Home உலகம் சீன நிலக்கரிச் சுரங்கத்தில் பெரும் தீ விபத்து – 26 பேர் பலி!

சீன நிலக்கரிச் சுரங்கத்தில் பெரும் தீ விபத்து – 26 பேர் பலி!

616
0
SHARE
Ad

Turkey-பெய்ஜிங், நவம்பர் 27 – சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள லியாவ்னிங் மாகாணத்தில், நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.

50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த ஆண்டு ஏற்பட்ட பெரிய தீ விபத்துகளில் இது ஒன்று என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லியாவ்னிங் மாகாணத்தில் அரசுக்கு சொந்தமான புக்சின் நிலக்கரி நிறுவனத்தின், துணைக் கிளையில் உள்ள சுரங்கத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

குறிப்பிட்ட அந்தப் பகுதியில் விபத்து ஏற்படுவதற்கு முன்னர், 1.6 ரிக்டர் அளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அங்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த தீ விபத்து பற்றி மீட்புக் குழுவினர் கூறுகையில், “சுரங்கத்தில் ஏற்பட்ட கரும்புகை காரணமாக விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.”

“இந்த விபத்தில் 26 பேர் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் சுரங்க விபத்தில் 1049 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் சீனாவில் சுரங்க விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்து வரும் நிலையில், அரசு சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டவேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.