Home இந்தியா கருணாநிதி சட்டசபைக்கு வர வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

கருணாநிதி சட்டசபைக்கு வர வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

828
0
SHARE
Ad

o.panneerசென்னை, நவம்பர் 27 – முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்; “திமுக தலைவர் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் சட்டப்பேரவையை கூட்டுவது பற்றி அறிக்கைகளை வெளியிடுவதும், விமர்சனங்கள் செய்வதையும் தொடர்ந்து வருகின்றனர்”.

“ஆளும் கட்சியினர் உறுதிமொழி அளித்தால் சட்டமன்றத்துக்குள் வருவதாக சொல்லியிருக்கிறார் கருணாநிதி. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்துக்கு வந்து பேசும்போது, தி.மு.க உறுப்பினர்கள் கட்டுப்பாடு காத்து, அமைதியாக இருந்து அவரது உரையை கேட்டதாகவும்,”

“அப்போது தி.மு.க உறுப்பினர்கள் கடைப்பிடித்த கண்ணியத்தைப் போல, இப்போது அதிமுக உறுப்பினர்கள் நிச்சயம் கடைபிடிப்பார்கள் என்ற உறுதிமொழியை அளித்தால் சட்டப்பேரவைக்கு வருவதற்கு தாம் தயாராக இருப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்”.

#TamilSchoolmychoice

“சட்டமன்றத்தில் தமிழக அரசை விமர்சிப்பதற்கு ஏதேனும் பொருள் இருக்கிறது என்று கருணாநிதி கருதுவாரேயானால், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், அவரது சட்டமன்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை பேச அனுமதிப்பாரேயானால்,”

“சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் கருணாநிதிக்கு உள்ளது என்றால், கருணாநிதி, வருகிற 4-ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள சட்டமன்ற கூட்டத் தொடருக்கு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.