Home உலகம் சார்க் நாடுகளுக்கிடையே மின்சாரப் பரிமாற்றம் குறித்து புதிய ஒப்பந்தம்!  

சார்க் நாடுகளுக்கிடையே மின்சாரப் பரிமாற்றம் குறித்து புதிய ஒப்பந்தம்!  

455
0
SHARE
Ad

sarcகாத்மாண்டு, நவம்பர் 28 – நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் சார்க் நாடுகளிடையே மின்சார பரிமாற்றத்திற்கான ஒப்பந்தம் கடைசி நிமிடத்தில் கையெழுத்தானது. இந்தியா முன்மொழிந்த இந்த திட்டத்தை ஆரம்பத்தில் பாகிஸ்தான் எதிர்த்தது.

நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் சார்க் நாடுகளை ஒருங்கிணைக்க பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டது. அவற்றில் மிக முக்கிய அம்சம், சார்க் நாடுகளிடையே மின்சார பரிமாற்றத்திற்கான ஒப்பந்தம்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின் போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆரம்பத்தில் இதற்கு கடுமையான எதிர்ப்பை  இருந்தார். பின்னர் இந்த புதிய ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றி தலைவர்கள் வலியுறுத்தினர். இதைனையடுத்து அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கடைசி நேரத்தில் சம்மதித்தார்.

இந்த மாநாட்டின் இறுதியில் 36 அம்சங்களை கொண்ட பிரகடனம் வெளியிடப்பட்டது. வறுமை ஒழிப்பு, உணவு பாதுகாப்பு, எல்லை தாண்டிய குற்றச்செயல்கள் ஒழிப்பு, ஆயுதக்கடத்தல் தவிர்ப்பு, போதைப்பொருட்கள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.