Home வாழ் நலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காய்!

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காய்!

614
0
SHARE
Ad

kovaikkaiநவம்பர் 28 – கோவையின் இலை, காய், கனி, தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது. கோவைப் பழங்கள் தொழுநோயை தீர்க்கும் வல்லமை பெற்றதாகும். அது மட்டுமல்லாமல் ஆஸ்துமா, மூச்சிரைப்பு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்து.

இயல்பாகவே கோவைச் செடியில் ‘குளுக்கோஸ்-6 பாஸ்பேடஸ்’ என்னும் வேதிப்பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வேதிப்பொருள் தான் கல்லீரலில் உற்பத்தியாகி, நம் உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

கோவைப் பழத்தை உண்டால் பல் வலி கூட குறையுமாம். கோவை இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து புண்களுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும்.

#TamilSchoolmychoice

kovai_002கோவையின் ஒரு பிடி இலையை நீரில் போட்டு, அதனை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டு வேளை பருகி வந்தால், உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாகும். கண் எரிச்சல் நீங்கும்.

இருமல், நீரடைப்பு, சொறி சிரங்கு, புண் ஆகியவை குணமாகும். கோவைக்காயை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். வாய்ப் புண்ணை போக்கும் தன்மை கோவைக்காய்க்கு உண்டு.