Home கலை உலகம் 5000 திரையரங்குகளில் ‘லிங்கா’ வெளியீடு!

5000 திரையரங்குகளில் ‘லிங்கா’ வெளியீடு!

533
0
SHARE
Ad

Lingaa-audio1சென்னை, நவம்பர் 28 – கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘லிங்கா’. அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

சந்தானம், விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், ராதாரவி, கருணாகரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் பெற்ற ‘லிங்கா’, ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி வெளியாகிறது. உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் ‘லிங்கா’ திரையிடப்பட இருக்கிறது.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் மட்டும் 200 திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறதாம். ரஜினியின் பிறந்த நாள், ‘லிங்கா’ படம் வெளியீடு என்று எல்லாம் ஒரே நாளில் அமைந்திருப்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.