Home வணிகம்/தொழில் நுட்பம் மாஸின் புதிய நிர்வாகம் அடுத்த மாதம் அறிவிப்பு!

மாஸின் புதிய நிர்வாகம் அடுத்த மாதம் அறிவிப்பு!

543
0
SHARE
Ad

MAS LOGOகோலாலம்பூர், நவம்பர் 30 – மலேசியா ஏர்லைன்ஸ்-ன்  புதிய நிர்வாகம் பற்றி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று அதன் பெரும்பான்மை பங்குதாரரும், மலேசிய அரசாங்கத்தின் முதலீட்டு அமைப்புமான கசானா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான மாஸ், எம்எச் 370 மற்றும் எம்எச் 17 ஆகிய இரு விமானங்களின் பேரிடர் காரணமாக கடுமையான பொருளாதார சரிவும், நம்பகத்தன்மை இழப்பையும் சந்தித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக வருவாய் இழப்பை சந்தித்தாலும், பேரிடர்களுக்குப் பிறகு மாஸ் மீண்டு வருமா என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் குறைந்துள்ளது.

இந்த நிலையில், மாஸின் பெரும்பான்மை பங்குதாரரான கஸானா நிறுவனம், மாஸை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த மாதம், சிறு முதலீட்டாளர்கள்  கஸானாவின்  பங்கு ஒன்றிற்கு 27 காசுகள் என்ற பேரத்தை ஒப்புக்கொண்டனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் கஸானா நிறுவனம், மாஸின் சீரமைப்புப் பணிகள் அனைத்தும் முடிந்து அடுத்த வருடத்தின் ஜூலை மாதம் முதல் சிறந்த செயல்பாட்டுடன் இயங்கும் என்று கூறியுள்ளது.

மாஸின் மறுசீரமைப்பு குறித்து தற்போதய தலைமை நிர்வாகி அகமட் ஜொகாரி யஹ்யா கூறுகையில், “தற்சமயம் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மாஸின் பொருளாதாரம் ஓரளவிற்கு உயர வாய்ப்புள்ளது. எனினும், மற்ற நிறுவனங்களுடனான போட்டி, இரு பேரிடர்களினால் ஏற்பட்டுள்ள அவப் பெயர் இவை அனைத்திற்கும் தீர்வு, மறு சீரமைப்பு ஒன்றே” என்று கூறியுள்ளார்.

காஸானா மாஸை மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திருப்ப, சுமார் 6 பில்லியன் ரிங்கிட்டுகளை, மறு சீரமைப்பிற்காக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.  இவற்றில் சுமார் 2 பில்லியன் ரிங்கிட், மாஸின் சிறு முதலீட்டாளர்களிடம் திருப்பி செலுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.