Home உலகம் நைஜீரியாவில் மசூதி ஒன்றின் மீது வெடிகுண்டுத் தாக்குதல்:100 பேர் பலி!

நைஜீரியாவில் மசூதி ஒன்றின் மீது வெடிகுண்டுத் தாக்குதல்:100 பேர் பலி!

684
0
SHARE
Ad

Nigeria mapகனோ, நவம்பர் 30 – நைஜீரியாவின் கனோ நகரில் உள்ள மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில்  பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நைஜீரியாவில் வடக்கு பகுதியில் உள்ள கானோ நகரில், பிரசித்தி பெற்ற மசூதி ஒன்றில் நேற்று முன்தினம் மாலை 2 மணியளவில் தொழுகை நடந்து கொண்டிருந்தது, அப்போது அங்கு புகுந்த போக்கோ ஹரம் படை தீவிரவாதிகள் மசூதியில் குண்டுகளை வெடிக்க செய்தனர். மேலும், அவர்களில் சிலர் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ள அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

தீவிரவாதிகளின் கொடூரச் செயல்களை அந்நாட்டு அரசு கட்டுப்படுத்தத் தவறியதால், மக்கள் அரசுக்கு எதிராக பெருங்கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறுகையில், “பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க நைஜீரிய அரசு எடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் ஐ.நா. ஆதரவளிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.