Home கலை உலகம் லதா ரஜினிகாந்தை மிரட்டி பணம் பறிக்க திட்டம் – தயாரிப்பாளர் முரளி மனோகர் விளக்கம்

லதா ரஜினிகாந்தை மிரட்டி பணம் பறிக்க திட்டம் – தயாரிப்பாளர் முரளி மனோகர் விளக்கம்

520
0
SHARE
Ad

-Latha-Rajinikanthசென்னை, டிசம்பர் 2 – கோச்சடையான் படத்தை வினியோகம் செய்ததில் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி செய்ததாக தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகா போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கோச்சடையான் பட தயாரிப்பாளர் முரளி மனோகர், லதா ரஜினிகாந்தை மிரட்டி பணம் பறிக்கும் செயல் தான் இது, என்று தெரிவித்துள்ளார். இது குறித்து முரளி மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்மெண்ட் மற்றும் ஈரோஸ் இண்டர் நேஷனல் இணைந்து நவீன தொழில்நுட்பத்தில் தயாரித்து வழங்கிய திரைப்படம் கோச்சடையான். இது கோவாவில் நடைபெற்ற 45–வது அகில இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது”.

#TamilSchoolmychoice

“மீடியா ஒன் நிறுவனம், ஆட்பீரோ அட்வடைசிங் நிறுவனத்திடமிருந்து படம் வெளியாகும் முன் 33 கோடி ரூபாய் கடன் வாங்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஆட்பீரோ வாக்குறுதியின்படி ரூ.30 கோடியை ஏற்பாடு செய்ய தவறி விட்டது”.

“ஆட் பீரோ ரூ.10 கோடி மட்டுமே கொடுத்தது. இதனால் படம் மே 9, 2014 அன்று வெளியாக வேண்டியது தள்ளி வைக்கப்பட்டது. மீடியா ஒன் 10 கோடி ரூபாயில், 4.75 கோடியை திருப்பி செலுத்திய நிலையில், மற்றொரு 4 கோடி வங்கி வரவோலையாக செலுத்தியது”.

“மீதமுள்ள தொகை மற்றும் வட்டிக்கு, சொத்து ஆவணங்களை பிணையாக கொடுக்க சம்மதித்துள்ளது. ஆட்பீரோ 10 கோடி ரூபாய்க்கு 6 மாத காலத்திற்கு 4 கோடிக்கும் அதிகமான வட்டியும் கேட்டது”.

“மேலும் இந்த தகவலை பத்திரிக்கைக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்தி, நிர்வாகத்தின் பெயரை களங்கப்படுத்தியது மட்டுமல்லாமல் லதா ரஜினிகாந்த்தை அவமானப்படுத்தியது”.

“இந்த பண பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்த் ஒரு போதும் தலையிட வில்லை. ஆட்பீரோ கொடுத்ததாக சொல்ல கூடிய எந்தவொரு காசோலையோ, உத்திரவாத கையெழுத்தோ லதா ரஜினிகாந்த் கொடுக்க வில்லை”.

“அவர்கள் 33 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். அவை இந்த பரிவர்த்தனைக்கு உட்பட்டதில்லை. இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்தை சம்பந்தப்படுத்த காரணம் அவருக்கு தீங்கிழைக்கும் நோக்கமும், மிரட்டி பணம் பறிக்கும் நோக்கமுமே ஆகும்” என அதில் கூறப்பட்டுள்ளது.