Home உலகம் அமெரிக்காவில் அதிக ஊதியம் பெரும் தலைமை நிர்வாகியாகிறார் சத்யா நாதெல்லா!  

அமெரிக்காவில் அதிக ஊதியம் பெரும் தலைமை நிர்வாகியாகிறார் சத்யா நாதெல்லா!  

800
0
SHARE
Ad
Satya-Nadella Microsoft
சத்யா நாதெல்லா

நியூயார்க், டிசம்பர் 5 – அமெரிக்காவில் அதிக ஊதியம் பெரும் தலைமை நிர்வாக அதிகாரியாக, மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெல்லா முன்னேற்றம் கண்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குதாரர்கள், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லாவிற்கு 84 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட ஊதிய தொகுப்பை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

எனினும் செல்வாக்கு மிகுந்த பங்குதாரர்கள் சிலர், நாதெல்லாவிற்கு வழங்கப்பட இருக்கும் ஊதிய தொகுப்பு அதிகப்படியான ஒன்று என்று கூறி ஆதரவளிக்க மறுத்தனர். எனினும், பெரும்பான்மையானவர்கள் (72 சதவீதம் பேர்) ஆதரவு தெரிவித்ததால், அவருக்கு மேற்கூறிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நாதெல்லாவிற்கு வழங்கப்படும் ஊதியத் தொகுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ஐஎஸ்எஸ் நிறுவன பங்குதாரர்கள், “மைக்ரோசாப்ட், சம்பளம் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். நாதெல்லா, தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற பொழுது அவருக்கு அதிகபட்ச சம்பளமான, 918,917 அமெரிக்க டாலர்கள் மற்றும் 3.6 மில்லியன் டாலர்கள் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. எனவே, தற்போதய முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

ஐஎஸ்எஸ் பங்குதாரர்களின் வாதத்திற்கு பதில் அளித்துள்ள மைக்ரோசாப்ட் தலைவர் ஜான் தாம்ப்ஸன், இது தொடர்பாக கூறியுள்ளதாவது:-

“உலகின்  தரம் வாய்ந்த ஒரு நிர்வாக அதிகாரியை கவர்வதற்கும், அவரை ஊக்கப்படுத்துவதற்கும் இவ்வளவு ஊதியம்  வழங்கப்படுவது சரியான முடிவாகும். அவரை ஊக்குவிப்பதன் மூலம், மைக்ரோசாப்ட்டில் திட்டமிட்ட மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அவருக்கு வழங்கப்படும் நீண்ட கால பங்குகள் மூலமாக, நிலையான நீண்ட கால பங்குதாரராக அவரை மாற்ற முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.