Home வணிகம்/தொழில் நுட்பம் ஒரே சமயத்தில் 6 ஏர் ஏசியா எக்ஸ் விமான சேவைகள் முன்பதிவு செய்யலாம்!

ஒரே சமயத்தில் 6 ஏர் ஏசியா எக்ஸ் விமான சேவைகள் முன்பதிவு செய்யலாம்!

594
0
SHARE
Ad

airasiaகோலாலம்பூர், டிசம்பர் 5 – ஒரே பரிவர்த்தனையில் பல்வேறு நகரங்களுக்கான ஆறு ஏர் ஏசியா எக்ஸ் விமானங்களை முன்பதிவு செய்யும் முறையை ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

மலிவான விலையில் பயணிகளுக்கு விமான சேவையினை வழங்கி வரும் ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனம், பயணர்களுக்கு புதிய வசதி ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதனைப் பயன்படுத்தி, பயணர்கள் ஒரே பரிவர்த்தனைகள் மூலம் முன்பதிவு செய்து ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, தென் கொரியா, தைவான், நேபால் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.

ஏர் ஏசியாவின் அதிகாரப்பூர்வ இணைய தளமான airasia.com-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியைப் பயன்படுத்தி, பயணர்கள் இரண்டு முதல் ஆறு விமானங்களுக்கான முன்பதிவினை ஒரே பரிவர்த்தனை மூலம் செய்யலாம்.

#TamilSchoolmychoice

மேலும், இதனைப் பயன்படுத்தி வர்த்தகப் பிரிவு (பிசினஸ் கிளாஸ்) மற்றும் முதல் தரப் பிரிவு (பிரிமியம் கிளாஸ்) இருக்கைகளை ‘ ஃப்ளை-த்ரூ’ மற்றும் ‘பாய்ண்ட் டு பாய்ண்ட் ‘பயணங்களுக்கு முன்பதிவு செய்ய முடியும்.