Home உலகம் தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்க முடியும் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்க முடியும் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

782
0
SHARE
Ad

waterமெல்போர்ன், டிசம்பர் 5 – தண்ணீரில் இரண்டு பங்கு ஹைட்ரஜன், ஒரு பங்கு ஆக்ஸிஜன் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நீர் மூலக்கூறுகளில் உள்ள ஹைட்ரஜனைக் கொண்டு எரிபொருள் தயாரிக்க முடியும் என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுப்பது என்பது மிகக் கடினமான காரியம். ஆனால் தண்ணீரில் இருந்து எளிதாக ஹைட்ரஜனை உருவாக்க முடியும்.

அதைக் கொண்டு தேவையான எரிபொருட்களை தயாரிக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்திய வம்சாவளியை சேர்ந்த கஸ்தூரி கிங்கோரனி உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் முடிவில், தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை முறையை பின்பற்றி ஹைட்ரஜனை உருவாக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.

தாவரங்கள் சூரிய ஒளி, தண்ணீரை பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை மூலம் புரதச்சத்துக்களை உருவாக்குகின்றன. அவை ஹைட்ரஜனை, இந்த ஒளிச்சேர்க்கை மூலம் பிரித்து எடுத்து தான் இதை செய்கின்றன.

அந்த தாவரங்கள் செய்வதுபோலவே ஒளிச்சேர்க்கை மூலம் விஞ்ஞானிகள் குழு புரதத்தை உருவாக்கி உள்ளது. மேலும் இவற்றில் தேவையான மாற்றங்களை செய்து ஹைட்ரஜன் வாயுவை உருவாக்கிட முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக கஸ்தூரி கங்கோரனி கூறுகையில், “தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்கும் முதல் கட்ட சோதனையில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, ஹைட்ரஜன் வாயுவை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

ஹைட்ரஜன் வாயுவில் அதிக சக்தி இருப்பது மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தையும் மாசு படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய கருவிகள் இல்லாமல் சாதாரண இயற்கை முறையிலேயே ஹைட்ரஜன் வாயுவை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளதால், எதிர்காலத்தில் எரிபொருள் பயன்பாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகின்றது.