Home இந்தியா வைகோ தலைமையில் பூரண மது விலக்கை வலியுறுத்தி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

வைகோ தலைமையில் பூரண மது விலக்கை வலியுறுத்தி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

494
0
SHARE
Ad

vaikoசென்னை, டிசம்பர் 5 – தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும்.

முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர். அப்போது வைகோ பேசியது;-

#TamilSchoolmychoice

“தமிழகத்தில் பல கிராமங்களில் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆனால், மது தாராளமாகக் கிடைக்கிறது. கேரளத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது”.

“முதல் கட்டமாக அங்கு 10 சதவீத மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கேரளத்தைப் போல தமிழகத்திலும் முழு மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மதுவின் பிடியில் இருந்து இளம் தலைமுறையினரைக் காப்பாற்ற முடியும்”.

“மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இனியும் தொடர்ந்து போராடுவோம்” என்றார் வைகோ. முழு மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.