Home கலை உலகம் ரஜினி பிறந்தநாளில் சிவகார்த்திகேயனின் காக்கிசட்டை இசை வெளியீடு!

ரஜினி பிறந்தநாளில் சிவகார்த்திகேயனின் காக்கிசட்டை இசை வெளியீடு!

606
0
SHARE
Ad

kaaki sattaiசென்னை, டிசம்பர் 8 – சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘காக்கிச்சட்டை’. இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டை கடந்த வாரமே வெளியிடுவதாக இருந்தனர்.

ஆனால், அனிருத் பாடல் பதிவை முடிக்காதததால் இசை வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் பதிவு செய்துவிட்டார் அனிருத்.

#TamilSchoolmychoice

இதனால், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அன்றைய தேதியிலேயே ரஜினியின் ‘லிங்கா’ படமும் வெளியாகும் என தெரிகிறது.

தற்போது இப்படத்தின் ஒரு இசை வரிகளை மட்டும் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.