கோலாலம்பூர், டிசம்பர் 8 – சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் ஆல்வின் டானுடைய கடப்பிதழை திரும்பப் பெற குடிநுழைவு துறை முடிவு செய்துள்ளது.
குடிநுழைவு சட்டத்தின்படி இன்று திங்கட்கிழமை அவரது கடப்பிதழ் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“கடப்பிதழ் என்பது அரசாங்கத்திற்கு சொந்தமான பொருளாக கருதப்படுவதால் ஆல்வின் டானின் கடப்பிதழை திரும்பப் பெற அரசாங்கத்திற்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அவரது கடப்பிதழை விரைவில் ரத்து செய்ய குடிநுழைவு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு சிலாங்கூர் மாநிலம் வழங்கிய பட்டத்தை திரும்பப் பெறுவதாக அம்மாநில சுல்தான் அண்மையில் அறிவித்தது தொடர்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார் ஆல்வின் டான். இதையடுத்து அவர் மீது இந்நடவடிக்கை பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.