Home கலை உலகம் யாரையும் அழைக்காமல் ரகசியமாக நடந்து முடிந்த வடிவேலு மகனின் திருமணம்!

யாரையும் அழைக்காமல் ரகசியமாக நடந்து முடிந்த வடிவேலு மகனின் திருமணம்!

644
0
SHARE
Ad

vadivelu_son_marriageமதுரை, டிசம்பர் 11 – வடிவேலு மிகவும் மனதளவில் உடைந்து போயிருக்கார் போல. சில மாதங்களுக்கு முன் தன் மகளின் திருமணத்தை தன் உறவினர்களோடு நடத்தி முடித்தார். அப்போது தான் அவரை சுற்றி பல பிரச்சனைகள் இருந்தது.

மகன் திருமணத்தை அனைத்து திரைப்பிரபலங்களுக்கும் சொல்லி தடபுடலாக நடத்துவார் என சிலர் கூறினார். ஆனால், அதுவும் தலை கீழாய் நடந்துள்ளது. வடிவேலு மகன் சுப்பிரமணியன்-புவனேஸ்வரி திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று காலை நடந்தது.

இந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. தன் சொந்த ஊர் உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

மண்டபத்திற்கு வெளியே வைத்திருந்த பதாகையில் (பேனர்) கூட வடிவேலு தன் பெயரையோ, தன் படத்தையோ போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.