Home இந்தியா உலக யோகா தினம் – பாபா ராம் தேவ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

உலக யோகா தினம் – பாபா ராம் தேவ் பத்திரிக்கையாளர் சந்திப்பு

674
0
SHARE
Ad

புதுடெல்லி, டிசம்பர் 12 – இனி ஆண்டு தோறும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐக்கிய நாட்டு சபை அறிவித்திருப்பதைப் பாராட்டி, இந்தியாவின் பிரபல யோகா குருவும், சமூகப் போராட்டவாதியுமான பாபா ராம் தேவ் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றை இன்று நடத்தினார்.

Baba Ramdev PC World Yoga day

இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சில யோகா பயிற்சிகளையும் பாபா ராம்தேவ் செய்து காட்டினார்.  வயிற்றை சுருக்கி பாபா ராம் தேவ் செய்து காட்டிய பயிற்சியை இங்கே காணலாம்.
கடந்த செப்டம்பரில் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றவுடன் முதன் முதலாக ஐக்கிய நாட்டு சபையில் உரையாற்றிய நரேந்திர மோடி, யோகாவின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.
Indian Yoga Guru, Baba Ramdev addresses the media during a press conference on the declaration of the 'International Yoga Day' in New Delhi, India, 12 December 2014. The UN General Assembly (UNGA) has declared 21 June as International Yoga Day after Indian Prime Minister Narendra Modi proposed for observing an International Yoga day during a speech delivered by him in UN General Assembly in September 2014.
இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றும் பாபா ராம் தேவ்.