Home வணிகம்/தொழில் நுட்பம் உலக அளவில் வேலை செய்ய ஏற்ற சிறந்த 50 நிறுவனங்களில் கூகுளுக்கு முதலிடம்!

உலக அளவில் வேலை செய்ய ஏற்ற சிறந்த 50 நிறுவனங்களில் கூகுளுக்கு முதலிடம்!

447
0
SHARE
Ad

google serchவாஷிங்டன், டிசம்பர் 12 – ‘தி கிளாஸ்டோர்’ (The GlassDoor) எனும் இணையதளம், உலக அளவில் வேலை செய்வதற்கு ஏற்ற சிறந்த நிறுவனங்களாக 50 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் கூகுள் முதலிடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் இயங்கும் கிளாஸ்டோர் இணையத் தளம், கடந்த ஆறு வருடங்களாக உலக அளவில் வேலை செய்வதற்கு ஏற்ற சிறந்த இடங்கள் பற்றி தொடர் ஆய்வுகளை செய்து, சுமார் 50 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில், 2014-ம் ஆண்டின் சிறந்த 50 நிறுவனங்களின் பட்டியலை சமீபத்தில் அந்த இணைய தளத்தின் தலைமை செயல் அதிகாரி ராபர்ட் ஹோமேன் வெளியிட்டார். அதில் கூகுள் முதலிடம் பெற்றுள்ளது.

பணியாளர்களின் வேலை மற்றும் குடும்ப பொறுப்புகள் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் கூகுள் கூடுதல் கவனம் செலுத்தியதால் முதல் இடத்தை அந்நிறுவனம் பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

போஸ்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான ‘பெயின் & கம்பெனி’ (Bain & Company) இரண்டாவது இடத்திலும், ‘நெஸ்லே புரினா பெட்கேர்’ (Nestle Purina PetCare ) நிறுவனம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு, இரண்டாவது இடத்தில் இருந்த ‘டுவிட்டர்’ (Twitter), இந்த வருடம் 50 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலில் இடம் பெறவில்லை.

கடந்த ஆண்டு ஐந்தாவது இடத்தில் இருந்த ‘பேஸ்புக்’ (Facebook) இந்தாண்டு 13-வது இடத்திற்கும், கடந்த ஆண்டு மூன்றாம் இடத்தில் இருந்த வணிக சமூக வலைதளமான ‘லிங்க்டுஇன்’ (LinkedIn), 23-வது இடத்திற்கும் தள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.