Home கலை உலகம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் சன்னி லியோன் முதலிடம்!

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் சன்னி லியோன் முதலிடம்!

813
0
SHARE
Ad

sunny_storysizeபுதுடெல்லி, டிசம்பர் 18 – ஒவ்வொரு வருடமும் முடியும் தருவாயில் அந்த வருடத்தில் அதிகம் ரசிகர்களால் கவரப்பட்ட, தேடப்பட்ட கதாநாயகர்கள், பிரபலங்கள் என கூகுள் தளப்பட்டியலில் வெளியிடுவது வழக்கம்.

அதே போல் 2014-ஆம் ஆண்டிற்கான கூகுள் தளப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய பிரபலங்களுக்கான பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார் .

மேலும்,  முதல் 10 தேடல் படமாக சன்னி லியோன் நடித்து வெளியான ‘ராகினி எம்எம்எஸ்-2’ முதலிடத்திலும், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் சல்மானின் ‘கிக்’ மற்றும் ‘ஜெய் ஹோ’ பதிவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

பாலிவுட்டில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 நடிகர்கள் பட்டியலில் அமீர் கான், மற்றும் அபிஷேக் பச்சனின் பெயர்கள் இடம்பெறவே இல்லை. 1.சல்மான் கான் 2. ஷ்ரூக் கான் 3. அக்‌ஷய் குமார் 4. ரன்பீர் கபூர்.

5.ஷாகித் கபூர் 6. அமிதாப் பச்சன் 7.வருண் தவான் 8. ரன்வீர் சிங் 9. ஃபவட் கான் 10. இம்ரான் ஹாஷ்மி என இவர்கள்தான் 2014ல் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

இதே போல்: 1.கத்ரீனா கைஃப் 2. தீபிகா படுகோன் 3. அலியா பட் 4.பிரியங்கா சோப்ரா 5.ஐஸ்வர்யா ராய் 6.கரீனா கபூர் 7. அனுஷ்கா ஷர்மா 8. ஷாரதா கபூர் 9.சோனாக்‌ஷி சின்ஹா 10. சோனம் கபூர் ஆகியோர் கூகுள் தேடல் பாலிவுட் நடிகைகளில் முதல் 10 இடத்தைப் பிடித்துள்ளனர்.