Home அவசியம் படிக்க வேண்டியவை 2014-ம் ஆண்டின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஜாக் மா முதலிடம்!

2014-ம் ஆண்டின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஜாக் மா முதலிடம்!

692
0
SHARE
Ad

jack-maபெய்ஜிங், டிசம்பர் 19 – 2014-ம் ஆண்டில் அதிக இலாபம் ஈட்டிய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அலிபாபா நிறுவனர் ஜாக் மா முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த வெல்த் எக்ஸ் என்ற நிறுவனம், 2014-ம் ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், ஜாக் மாவைத் தொடர்ந்து, பிரபல அமெரிக்க முதலீட்டாளரான வாரன் பஃப்பெட், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஆங்கில ஆசிரியராக இருந்து தொழில் அதிபரான ஜாக் மா, தனது இணைய வர்த்தகத் தளமான அலிபாபாவின் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.

சமீபத்தில் மட்டும் இவரது சொத்துக்கள் 173 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 18.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அவர் லாபம் ஈட்டியுள்ளதாக வெல்த் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாவைத் தொடர்ந்து பிரபல அமெரிக்க முதலீட்டாளரான வாரன் பஃப்பெட் இரண்டாம் இடத்தில் உள்ளார். 2014-ம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு, 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவரைத் தொடர்ந்து பில் கேட்ஸ் மற்றும் மார்க் ஜக்கர்பர்க் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் உள்ளனர். இவர்களின் தற்போதய சொத்து மதிப்பு, முறையே 83.1 பில்லியன் மற்றும் 33.1 பில்லியன் டாலராகளாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.