Home இந்தியா திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் நடிகர் நெப்போலியன்!

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் நடிகர் நெப்போலியன்!

614
0
SHARE
Ad

nepoleon-amitshahசென்னை, டிசம்பர் 22 – திமுகவில் இருந்து விலகிய நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நெப்போலியன் பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த 35 ஆண்டுகளாக திமுகவில் அங்கம் வகித்து வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்து மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர்.

ஆனால், சமீப காலமாகவே திமுக நிகழ்வுகளை விட்டு விலகியிருந்தார் நெப்போலியன். இந்நிலையில், நேற்று திமுகவில் இருந்து விலகுவதாக கடிதம் வாயிலாக அக்கட்சித் தலைமைக்கு அவர் தெரியப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

அதன் தொடர்ச்சியாக சென்னை வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் இன்று அவர் அக்கட்சியில் இணைந்தார். அப்போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் உடன் இருந்தார்.