அளவளாவல்களிலும், புகைப்படங்களின் பரிமாற்றத்திலும் புதிய அனுபவங்களை ஏற்படுத்த பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.
அந்த வகையில் பேஸ்புக் அறிமுகப்படுத்தி உள்ள இந்த ஸ்டிக்கர்ட் செயலியின் மூலம், நாம் புகைப்படங்களில் அழகான கார்டூன்களையும், ஸ்மைலீக்களையும் வைத்து அனுப்பலாம்.
மேலும், இந்த கார்டூன்கள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், புகைப்படங்களில் ஒருவர் முகம் பிரதிபலிக்கும் உணர்வுகளை, அதே உணர்வு கொண்ட கார்ட்டூன்களாக மாற்றி அளவளாவல்களை சுவாரசியமானதாக மாற்றலாம்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், இளைஞர்கள் மத்தியில் பேஸ்புக்கின் மோகம் குறைந்து வருவதாகவும், பேஸ்புக்கின் இடத்தை வாட்ஸ்அப் பெரிதும் ஆக்கிரமித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பேஸ்புக் மீண்டும் தனது இடத்தை நிலை நிறுத்திக் கொள்ள பல்வேறு புதிய பொழுபோக்கு வசதிகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.