Home இந்தியா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

504
0
SHARE
Ad

soniyaபுதுடெல்லி, டிசம்பர் 24 – சுவாசக் கோளாறு காரணமாக, டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 5 நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

இதுகுறித்து சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டிருந்த டெல்லி ஸ்ரீகங்கா மருத்துவமனை நிர்வாகத் தலைவரும் மருத்துவருமான டி.எஸ். ராணா தெரிவிக்கையில்,

“அவரது உடல் நிலை சீரான நிலையில் உள்ளது. ஓய்வு எடுக்கும்படியும், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படியும் அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

#TamilSchoolmychoice

சுவாசக் குழாய் தொற்று காரணமாகவும், மூச்சு விடுதலில் பிரச்சனை ஏற்பட்டதாலும், சோனியா காந்தி கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.