Home உலகம் ஈராக், சிரியாவில் மீண்டும் வான்வழி தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா!

ஈராக், சிரியாவில் மீண்டும் வான்வழி தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா!

536
0
SHARE
Ad

untitledவாஷிங்டன், டிசம்பர் 24 –  ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளன.

அமெரிக்கா போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஈராக் மற்றும் சிரியாவில் தற்போது 16 முறை வான்வழி தாக்குதல் நடத்தி இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈராக்கின் வடக்கு பகுதியில் சின்ஜார் அருகே 4 முறை போர் விமானங்கள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசிப்பிடங்கள், வாகனங்கள், போர் தளவாடங்கள் அழிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

தால்அப்கார், ரமாடி, மொசூல், பாய்ஜி ஆகிய நகரங்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியாவில் துர்கிஷ் எல்லைப்பகுதியில் உள்ள கோபானி நகர் அருகே 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறப்பட்டு உள்ளது.