Home இந்தியா காஷ்மீரில் முதல்வர் உமர் அப்துல்லா ஒரு தொகுதியில் வெற்றி ஒரு தொகுதியில் தோல்வி!

காஷ்மீரில் முதல்வர் உமர் அப்துல்லா ஒரு தொகுதியில் வெற்றி ஒரு தொகுதியில் தோல்வி!

562
0
SHARE
Ad

omar-abdullahகாஷ்மீர், டிசம்பர் 24 – ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா ஒரு தொகுதியில் தோல்வியடைந்தார். சோனாவார், பீர்வா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட அவர், சோனாவார் தொகுதியை இழந்திருக்கிறார்.

இத்தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அஷ்ரப் மிர்ரிடிடம், ஒமர் அப்துல்லா தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற அஷ்ரப்பிற்கு ஒமர் அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பீர்வா தொகுதியில் ஆரம்பம் முதல் முன்னிலையில் இருந்து வந்த அவர், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான முப்தி முகமத் சயீத், அனந்த்நாக் தொகுதியில் ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

காங்கிரஸை சேர்ந்த துணை முதலமைச்சர் தாரா சந்த், சாம்ஃப் தொகுதியில் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பார்ஹைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தும்கா தொகுதியில் பின்னடைவை சந்தித்திருக்கிறார். அவரது அமைச்சரவை சகாக்கள் பெரும்பாலோனார் தோல்வி முகத்தில் உள்ளனர்.

அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டி கிரித் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் மதுகோடா மஜ்கான் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரான அர்ஜூன் முண்டா, கர்ஸ்வான்தொகுதியில் பின்னடைவில் உள்ளார். கோடர்மா தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் அன்னபூர்வ தேவி ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.