Home கலை உலகம் இயக்குநர் கே.பாலசந்தர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

இயக்குநர் கே.பாலசந்தர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

546
0
SHARE
Ad

K.-BALACHANDERசென்னை, டிசம்பர் 24 – இயக்குநர் கே.பாலசந்தர் நேற்று மாலை காலமானார். இவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா வீட்டிலிருந்து தனது இரங்களை தெரிவித்தார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் கருணநிதி மற்றும் இதர அரசியல் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவும் இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது; “பாரதியாரை போல் சமூக உணர்வுள்ள கருத்துக்களை படங்கள் மூலம் வெளிப்படுத்தியவர்  இயக்குநர் கே.பாலசந்தர் என கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலையுலகிற்கு உணர்வோடு ஆற்றிய பங்கு என்றும் நினைவு கூறத்தக்கவர் இயக்குநர் கே.பாலசந்தர் எனவும் கூறியுள்ளார்.

பாலசந்தர் உடலுக்கு த.மா.கா., தலைவர் வாசன், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.