Home கலை உலகம் கே.பாலசந்தருக்கு தமிழக பிரபலங்கள் இறுதி அஞ்சலி (படக் காட்சிகள் – தொகுப்பு 1)

கே.பாலசந்தருக்கு தமிழக பிரபலங்கள் இறுதி அஞ்சலி (படக் காட்சிகள் – தொகுப்பு 1)

525
0
SHARE
Ad

சென்னை, டிசம்பர் 24 – நேற்று காலமான பிரபல இயக்குநர் கே.பாலசந்தரின் நல்லுடலுக்கு தமிழகத்தின் பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் இறுதி மரியாதையைத் தெரிவித்து வருகின்றனர்.

கே.பாலசந்தருக்கு பிரபலங்கள் இறுதி மரியாதை செலுத்தும் படக் காட்சிகளை இங்கே காணலாம்:-

Homage to KB -Rajni

#TamilSchoolmychoice

நடிகர் ரஜினிகாந்தும், கவிஞர் வைரமுத்துவும் பாலசந்தருக்கு இறுதி மரியாதை செலுத்துகின்றனர்.

சாதாரண பஸ் கண்டக்டராக, சென்னை திரைப்படக் கல்லூரிக்கு நடிப்புப் பயிற்சிக்காக பெங்களூரில் இருந்து வந்த சிவாஜி ராவ் கெய்க்வாட்டை, ரஜினிகாந்தாக – இன்றைய சூப்பர் ஸ்டாராக – உருமாற்றியதில் பாலசந்தருக்கு பெரும் பங்குண்டு.

KB Rajni consoling KB Wifeகே.பாலசந்தரின் துணைவியாருக்கு ஆறுதல் கூறும் ரஜினிகாந்த்…

Homage to KB - Vaiko

மதிமுக தலைவர் வைகோ தனது நடைப் பயணப் போராட்டங்களுக்கு இடையிலும் கே.பாலசந்தருக்கு இறுதி மரியாதை செலுத்தத் தவறவில்லை.

Homage to KB - Director Vasanth

பாலசந்தரிடம் துணை இயக்குநர்களாகப் பணியாற்றி வெற்றிக் கொடி நாட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குநர் வசந்த் (படத்தின் தாடியுடன் காணப்படுபவர்). அவர் அஞ்சலி செலுத்தும் காட்சி.

Homage to KB Sarath Kumar

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரின் இறுதி மரியாதை

Homage to KB Fatimah Babu

தொலைக்காட்சி புகழ் பாத்திமா பாபுவின் கண்ணீர் அஞ்சலி…

KB Homage - SP Muthu Raman

தமிழ்த் திரையுலகின் மற்றொரு மூத்த இயக்குநரும் – பாலசந்தரின் சமகால இயக்குநர்களில் ஒருவருமான எஸ்.பி.முத்துராமன், பாலசந்தரின் துணைவியாருக்கு ஆறுதல் கூறுகின்றார்…..